Community, COVID19

Jom Pi Vaksin (Tamil)

கோவிட்-19 பெருந்தொற்றின் சீற்றமும் முழு நடமாட்ட கட்டுப்பாட்டு தடை அமல் படுத்தப்பட்ட நாள் தொடங்கி நாம் அனைவரின் வாழ்வாதரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பணக்காரரோ அல்லது ஏழை எளியவரோ, வயதானவரோ அல்லது இளைஞர்களோ, ஆண்களோ அல்லது பெண்மணிகளோ, எந்த அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களாக இருந்த போதிலும் நாம் அனைவரும் இப்பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இருந்த போதிலும், கண்டிப்பாக நம்மை விட இன்னும் அதிகமாக பாதிக்கப்பட்ட தரப்பினர் இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இன்று,நான் என் தொகுதி கண்காணிப்பு பணியில் இருந்த போது, என் தொகுதியை உட்படுத்திய வாடகை கார் ஓட்டுநர்கள் என்னிடம் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சிரமங்களை பகிர்ந்துக் கொண்டனர். தங்கள் வாடகை கார் சேவையை ஒருவர் கூட பெறாத இந்நிலையில் தாங்கள் வாடகை கார் மாதாந்திர தவணை பணத்தையும், பெட்ரோல் மற்றும் கார் பழுது பார்க்கும் கட்டணங்களையும் சமாளிக்கும் இக்கட்டில் இருப்பதை கூறினர். அதோடு வீட்டு செலவுகள் மற்றும் குடும்ப செலவினங்கள் வேறு.

இந்நிலையைக் கருத்தில் கொண்டு நான் புக்கிட் மெர்தாஜாம் வாடகை கார் ஓட்டுனர் சங்கங்களோடு ஒன்றிணைந்து தடுப்பூசி மையத்திற்கு செல்லும் குறிப்பாக மூத்த குடிமக்கள் (60 வயது & அதற்கும் மேற்பட்ட), மாற்று திறனாளிகள் மற்றும் கர்ப்பணி பெண்கள் அனைவருக்கும் இலவச வாடகை கார் சேவை வழங்க முடிவு செய்துள்ளேன்.

பொது மக்களுக்கு இலவச போக்குவரத்து சேவை வழங்குவதோடு வாடகை கார் ஓட்டுநர்களுக்கு நான் அக்கட்டணத்தை செலுத்தி விடுவேன்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்❤️❤️

தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டம் (பிஐசிகே) வெற்றியடைவதை உறுதி செய்திட இது எனது சிறிய முயற்சியாகும் மற்றும் அதேவேளையில் புக்கிட் மெர்தாஜாம் வாடகை கார் ஓட்டுநர்களின் பிரச்சனைகளையும் குறைக்க முடிகின்றது. இம்மாதிரியான திட்டத்தை சிரம்பானில் அமல் படுத்திவரும் சகோதரர் அந்தோணி லோக் அவர்களின் முயற்சியை நான் இங்கு தொடர்ந்துள்ளேன்.

மூத்த குடிமக்கள் (60 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட), மாற்று திறனாளிகள், கர்ப்பணி பெண்கள் ஆகியோர் தடுப்பூசி மையத்திற்கு செல்ல போக்குவரத்து சேவை தேவைப்பட்டால் தடுப்பூசி பெறும் ஒரு நாளுக்கும் முன்பே தயங்காமல் பின்வரும் எண்களுக்கு தொடர்புக் கொள்ளலாம்: 04-538 1226 அல்லது 012-411 3539 அல்லது 010-513 6533.

வாருங்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்வோம்!

(தற்போது புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற தொகுதியை உட்படுத்திய மக்களுக்கு மட்டுமே இச்சேவையை வழங்க முடிந்த என்னை மன்னிக்கவும்.🙏)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s