General

I ❤️ BM Self-care Kit

நாம் பல மாதங்களாக கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்துப் போராடி வருகிறோம்.

பினாங்கு மாநில ரீதியாக, மார்ச் 2020 தொடங்கி ஜூன் 2020 வரையிலும் “பினாங்கு லாவான் கோவிட்-19” பிரச்சாரத்தை திட்டமிட்டு நிர்வகிக்க நான் முதலமைச்சருக்கு உதவியுள்ளேன்.

புக்கிட் மெர்தாஜாம் தொகுதியில் நான் விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளேன், பொது மக்கள் தடுப்பூசி பெற்றிட பதிவு நிகழ்வுகளை நடத்தியுள்ளேன், பி.பி.வி.க்களுக்கு இலவச வாடகை கார் வசதிகளை வழங்கியுள்ளேன், புக்கிட் மெர்தாஜாம் மற்றும் மத்திய செபராங் பிறை மாவட்டங்களில் பி.பி.வி அமைக்க உதவியுள்ளேன், கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கு உபகரணங்களை வழங்கியுள்ளேன், மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை சிக்கலின்றி நடைபெற்றிட மடிக்கணினிகள் (லேப்டாப்) மற்றும் கணிப்பலகைகளை (டேப்லெட்) விநியோகித்துள்ளேன், உணவுக்கூடைகள் மற்றும் பல உதவிகளை தந்துள்ளேன்.❤️

பெருந்தொற்று இன்னும் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்படாத இந்நிலையில் நாம் நமது முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டும். பினாங்கில் பதிவுசெய்யப்படும் தினசரி நேர்வுகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே உள்ளன. துரதிர்ஷ்டவசமாக இறப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.😔

மத்திய அரசின் குறைந்த வளங்களால், மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் அதிகரித்து வரும் நேர்வுகளுக்கு இடமளிக்க முடியவில்லை. பல கோவிட்-19 நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு அதிகாரிகளின் எந்த உதவியும் அல்லது பதிலும் இல்லாமல் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

இந்த பிரச்சனையை உணர்ந்து, புக்கிட் மெர்தாஜாம் பாராளுமன்ற தொகுதியில் வசிப்பவர்களுக்காக நான் பி.எம்.ஐ ❤️ என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் தனிப்பட்ட பராமரிப்பு கருவி (கிட்) தயாரிக்க எனது சொந்த பணத்தை பயன்படுத்தியுள்ளேன்.

இந்த கருவி சுய தனிமைப்படுத்தலில் இருக்கும் கோவிட்-19 நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.⛑️

நான் பி.எம்.ஐ ❤️ கருவியில் இருப்பவை:

1) ஆக்ஸிமீட்டர்
2) கோவிட்-19 சுய வடிக்கட்டி கருவி (உமிழ்நீர் சிய பரிசோதனை கருவி).
3) கை தூய்மி
4) முகக்கவரி
5) கோவிட்-19 மேலாண்மை வழிகாட்டி

பி.எம்.ஐ ❤️ கருவி இலவசமாக வழங்கப்படும். இருப்பினும் நிதி பற்றாக்குறையின் காரணமாக தேவைப்படுபவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிப்பார்கள் என்று நம்புகிறேன். இதன் வழி நாங்கள் வசதி குறைந்தவர்களுக்கு உதவ முடியும்.

கோவிட்-19 சுய-ஸ்கிரீனிங் கிட்டின் விலை தற்போது ரிம19.90-ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், பி40 குடும்பத்தினருக்கு குறிப்பாக மீண்டும் மீண்டும் ஸ்கிரீனிங் செய்ய வேண்டியவர்களுக்கு இது சிரமமே.

ஆக்ஸிமீட்டர் ஒன்று ரிம100++ விற்கப்படுவதால் பி40 குடும்பத்தினர் இதனை பெற்றிட சிரமத்தை எதிர்நோக்குவர்.

புக்கிட் மெர்தாஜாம் பாராளுமன்ற தொகுதியில் வசிப்பவர்களில் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயளிகள் நான் பி.எம்.ஐ ❤️ கருவியை http://www.stevensim.com/kitilovebm எனற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது 04-538 1226 அல்லது 012 411 3539 என்ற அலுவலக எண்ணுக்கு தொடர்புக் கொள்ளலாம்.🌐📞

உண்மையை கூறினால் நிதி நெருக்கடியின் காரணமாக என்னுடைய இந்த திட்டம் வெற்றிபெற நீங்கள் எனக்கு உதவ விரும்பினால், பின்வரும் வங்கி கண்க்கில் தங்களின் பங்களிப்பை அளிக்கலாம். தங்களின் பங்களிப்பை நான் பெரிதும் பாராட்டுகிறேன் :

வங்கி கணக்கு : Maybank
பெயர் : Akaun Khas Pusat Khidmat Parlimen Bukit Mertajam
கணக்கு எண் : 557090527361

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s